Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Niroshini / 2016 மார்ச் 09 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கனகராசா சரவணன்
அம்பாறை, சவளக்கடை பொலிஸ் நிலையத்துக்கு அருகாமையில் உள்ள மாட்டுப்பட்டியில் இருந்து பசு மாட்டைத் திருடிச் சென்று அதனை வெட்டி சம்மாந்துறை பழைய சந்தைப் பகுதியிலுள்ள இறைச்சிக்கடையில் விற்பனை செய்த இருவரை இறைச்சியுடன் இன்று புதன்கிழமை பகல் சவளக்கடை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இதன்போது, வெட்டிய பசு மாட்டின் தலை மற்றும் அதன் தோல் என்பன மீட்கப்பட்டுள்ளதாகவும் இறைச்சிக்கடை உரிமையாளர் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மாட்டுப்பட்டியில் வழமைபோல நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மாடுகளை அடைத்துவிட்டு அதன் உரிமையாளர் வீட்டுக்கு சென்று இன்று புதன்கிழமை காலையில் மாட்டுப்பட்டிக்கு சென்று மாடுகளை திறந்துவிடமுற்பட்டபோது, அங்கிருந்த 75 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பசு மாடு காணாமல் போயுள்ளது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, மாட்டு உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோது, குறித்த பசு மாட்டை சம்மாந்துறை பழைய சந்தைப்பகுதி இறைச்சிகடை உரிமையாளர் ஒருவர் திருடிச் சென்றதாக தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அங்கு சென்ற பொலிஸார் சோதனையின்போது திருடிய பசு மாட்டை, மாடு அறுக்கும் மடுவத்தில் அறுத்து, அதன் இறைச்சியை இறைச்சிக்கடையில் தொங்கவிட்டுள்ளனர்.
தொடர்ந்து இறைச்சிக்கடையில் வேலை செய்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதேவேளை, அறுக்கப்பட்ட பசு மாட்டு இறைச்சியில் பொது சுகாதார உத்தியோகத்தர்களின் சீல் எதுவும் இருக்கவில்லை எனவும் அவர்கள் மடு அறுக்கும் தொழுவத்துக்கு அவர்கள் வரும் முன் இந்த பசு மாட்டை அறுத்து அதன் இறைச்சியை எடுத்துவந்துள்ளதாகவும், அன்றைய தினம் 5 மாடுகள் அறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக இதுவரை பொது சுகாதார உத்தியோகத்தர்கள் எந்தவித முறைப்பாடுகளையும் செய்யவில்லை என தெரிவித்த பொலிஸார், இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .