2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

இறக்காமத்தில் காணிக் கச்சேரி

Editorial   / 2022 ஜனவரி 06 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்

இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இறக்காமம் - 03, 05, 08 மற்றும் வரிப்பத்தான்சேனை - 03 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் காணி அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு ஏற்கெனவே காணிக் கச்சேரி நடத்தப்பட்டிருந்தது.

எனினும், குறித்த காணிக் கச்சேரிகளுக்கு தகுந்த காரணங்களால் வருகை தராதவர்களுக்கான காணிக் கச்சேரி, பிரதேச செயலகக் கூட்ட மண்டபத்தில், உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நசீல் தலைமையில் இன்று (06) நடைபெற்றது.

இக்காணிக் கச்சேரிக்கு பிரதேச செயலகக் காணிப் பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் பிரிவுக்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டதோடு, குறித்த பொதுமக்களும் பங்குபற்றியதோடு, தங்கள் காணிப் பிரச்சினை தொடர்பாக நேரடியாக உரிய அதிகாரிகளின் கவத்துக்கு கொண்டுவந்து, தீர்வைப் பெற்றுக்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X