Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 19 , மு.ப. 08:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
இலங்கையில் 60 சதவீதமான மக்கள் தொற்றா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரதியமைச்சர் பைஷால் காசீம் தெரிவித்தார்.
ஒலுவில் அல்-ஜாயிஸா மகளிர் வித்தியாலயத்தில் 2015ஆம் ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டு விழா இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'சிறந்த நாட்டைக் கட்டியொழுப்புவதற்கு நாம் எல்லோரும் சுகதேகிகளாக வாழ வேண்டும். நாம் ஒவ்வொருவரும் உணவு பழக்கவழக்கத்தை கடைப்பிடித்து வாழ்வோமானால், சுகதேகிகளாக வாழ முடியும்.
மாணவர்கள் சிறுபராயத்திலிருந்தே உடற்பயிற்சி, சிறந்த உணவுப் பழக்கழக்கங்களை கடைப்பிக்க வேண்டும். அப்போதே எதிர்காலத்தில் நாம் சிறந்த கல்வியாளர்களாக மாற முடியும்.
எதிர்காலத்தில் தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்கு அரசாங்கத்தினால் கல்வித் தகமையில் பல மாற்றங்கள் கொண்டுவரவுள்ளது. அந்த வகையில் பட்டதாரிகளுக்கே அரச துறையில் தொழில் வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளது. அதற்கு ஏற்றவாறு கிராமப்புற பாடசாலைகளும் இன்று கல்வியில் முன்னேறி வருகின்றது' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
21 May 2025