2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

இலவச மருத்துவ முகாம்

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

மார்பக நோய்க்கான இலவச மருத்துவ முகாம் நாளை  சனிக்கிழமை காலை 07.30 மணி முதல் பிற்பகல் 01 மணிவரை அக்கரைப்பற்று சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.எல்.அலாவுதீன் தெரிவித்தார்.

இரண்டு வாரங்களுக்கு மேற்பட்ட சளியுடன் கூடிய இருமல், சளியுடன் இரத்தம் வெளியாதல், மாலை  மற்றும் இரவு வேளைகளில் மெல்லிய காய்ச்சல், உடல் நிறை குறைதல் போன்ற அறிகுறிகள் கணப்பட்டால், இம்மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்.

விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியதிகாரிகள் பலர் கலந்து கொண்டு சிகிச்சை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X