2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

இலவச வைத்திய முகாம்

Niroshini   / 2015 நவம்பர் 29 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

சவளக்கடை பொலிஸார் ஏற்பாடு செய்த இலவச சுதேச வைத்திய முகாம் நேற்று சனிக்கிழமை அன்னமலை -03 கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவிலுள்ள மீனவர் சங்க கட்டடத்தில் இடம்பெற்றது.

பிரதேசத்திலுள்ள முதியவர்கள் சுதேச வைத்தியத்தில் அதிக நாட்டம் காட்டிவருவதை கவனத்தில் கொண்டே இவ்வைத்திய முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.

சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம்.எம்.நஜீப் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் சுதேச வைத்தியர் ஏ.ஜே.ஏ.றஸீம் கலந்து கொண்டு வைத்திய சேவையை வழங்கினார்.

இதில் 100ற்கும் மேற்பட்ட முதியவர்கள் இலவச வைத்திய சேவையை பெற்றுக்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X