Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜனவரி 24 , மு.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எம்.அறூஸ்
பாலமுனை ஜம்இய்யதுஸ் ஸஹ்வா அல் ஹைரிய்யாவின் (ஜஸ்கா) ஏற்பாடு செய்துள்ள, இலவச வைத்திய நிபுணர் சேவை முகாம், பாலமுனையில் எதிர்வரும் 30ஆம் மற்றும் 31ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இவ் வைத்திய முகாமில், 100 நோயாளிகளுக்கு கண்வில்லை மாற்று சத்திர சிகிச்சை, 150 நோயாளிகளுக்கு மருத்துவ கண்ணாடி வழங்குதல், 350 நோயாளிகளுக்கு வாசிப்புக் கண்ணாடி வழங்குதல், 200 சாதாரண நோயாளிகளுக்கு சாதாரண கண் சிகிச்சை வழங்குதல், 600 நோயாளிகளுக்கு பொதுவைத்திய நிபுணர்களின் சிகிச்சை, 300 சிறுபிள்ளைகளுக்கு சிறு பிள்ளை வைத்திய நிபுணர்களின் சிகிச்சை, 200 நோயாளிகளுக்கு காது, மூக்கு, தொண்டை வைத்திய நிபுணரின் சிகிச்சை, 100 நோயாளிகளுக்கு தோல் வைத்திய நிபுணரின் சிகிச்சை என்பன வழங்கப்படவுள்ளன.
இதேவேளை, பிரபலமான வைத்திய நிபுணர்களின் ஆலோசனை மாத்திரமன்றி கண்ணாடிகளும் மருந்துகளும் இலவசமாக வழங்கிவைக்கப்படவுள்ளன.
இவ்வைத்திய முகாமில் சிகிச்சை பெற்று பயனடைய விரும்புபவர்கள் முற்கூட்டியே தங்களைப் பதிவு செய்து கொள்ளவேண்டும்.
முற்பதிவுசெய்துகொள்பவர்களுக்கு மாத்திரமே குறித்த வைத்திய முகாமில் சிகிச்சை வழங்கப்படும்.
பதிவுசெய்துகொள்ள விரும்புவோர், 077-0085105 அல்லது 075-4151077 எனும் அலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு பதிவு செய்துகொள்ள முடியும்.
16 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
50 minute ago
1 hours ago