2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

இலவச வைத்திய முகாம் பிற்போடப்பட்டது

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 10 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல், பைஷல் இஸ்மாயில்

கல்முனை றோட்டரிக் கழகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 13ஆம் திகதி முதல் 17ஆம் திகதிவரை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையிலும் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையிலும் நடைபெறவிருந்த இலவச வைத்திய சேவை முகாம் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு விசேட வைத்திய நிபுணர்களின் வருகை தாமதமடைவதன் காரணமாகவே இவ்வைத்திய முகாம் பிற்போடப்பட்டுள்ளது.

இவ்வைத்திய முகாமை நடத்துவதற்குரிய திகதி பின்னர் அறிவிக்கப்படுமென களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன், இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்

காது, மூக்கு, தொண்டை  தொடர்பான நோய்களுக்கு வைத்திய சிகிச்சை இலவசமாக வெளிநாட்டு விசேட வைத்திய நிபுணர்களினால் இதன்போது வழங்கப்படவுள்ளது. இவற்றில் குறைபாடுகள் மற்றும் நோய்த் தாக்கங்களை கொண்டவர்கள் முன்கூட்டி தமது பெயர் உள்ளிட்ட  விவரங்களை களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை மற்றும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைகளின் வைத்திய அத்தியட்சகர்களுடன் தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொள்ள முடியுமென்று அவ்வைத்தியசாலை நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கேட்கும் திறன் குறைபாடுள்ளவர்களுக்கு சுமார் 70 ஆயிரம் ரூபாய் பெறுமதியில் காது கேட்கும் கருவிகள் நூறு இலவசமாக வைத்திய நிபுணர்களின் சிபாரிசில் வழங்கப்படவுள்ளது. பொய்க்கால்கள் தேவைப்படுவோருக்கு அவற்றை வழங்குவதற்கான  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X