Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.எம்.அறூஸ், பைஷல் இஸ்மாயில்
அகில இலங்கை ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை உயர் தர விஞ்ஞான பிரிவு மாணவன் நஜீப் முஹம்மது டிலாஸ், புதிய நுணுக்குக்காட்டியைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.
இலங்கை விஞ்ஞான முன்னேற்ற அமைப்பின் 71ஆவது வருட அமர்வு, சிறி ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்றது. இதன்போது இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்களும் சான்றுதழ்களும் வழங்கப்பட்டன.
இவர் தனது திறமையின் மூலம் (Modern Cell Viewer) கலங்களை அவதானிக்கும் கருவியைக் கண்டு பிடித்து சாதனை படைத்தமைக்காக தங்கப் பதக்கம் மற்றும் சான்றுதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இக்கருவியானது நுணுக்குக்காட்டியை விட உருப்பெரிதாகவும், துள்ளியமாகவும் செயற்பாட்டை வெளிப்படுத்தும் தாவர, விலங்கு மற்றும் நுண்ணங்கி கலங்களின் கட்டமைப்பையும் நுண்ணிய பொருட்களையும் இதனூடாக துள்ளியமாய் பார்க்க முடியும்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago