2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இளம் பிக்குகள் துஸ்பிரயோகம்; மறுதவணை இடப்பட்டது

Freelancer   / 2023 மார்ச் 31 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

இளம் பிக்குகள் மீதான  பாலியல்  துஸ்பிரயோகம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு  பல நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்ட பிரதம  பௌத்த மதகுரு  தொடர்பான  வழக்கு எதிர்வரும்  ஜுன் மாதம் 22 ஆம்  திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்தி  வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம்  கல்முனை தலைமையக   பொலிஸ் பிரிவிற்குட்பட்ட   விஹாரை ஒன்றில்   வைத்து 3 இளம் பிக்குகள்  பாலியல் துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பிலான வழக்கு   புதன்கிழமை (29)கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில்   எடுத்து கொள்ளப்பட்ட நிலையில்,  விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு   எதிர்வரும்  ஜுன் மாதம் 22 ஆம்   திகதி வரை  மறுவிசாரணையிடப்பட்டது.

அம்பாறை மாவட்டம் சடயந்தலாவை பகுதி ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 இளம் பிக்குகள்  கல்முனை பகுதி    விஹாரை ஒன்றில்    பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் ஒன்றின் அடிப்படையில் 2022 செப்டம்பர் 13 ஆந் திகதி  கல்முனை சுபத்ரா ராமய   விகாராதிபதியாக  ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் என்றழைக்கப்படும் பிரதான பௌத்த மதகுரு அம்பாறை மாவட்ட சிறுவர் பெண்கள் விசேட பிரிவினரால் சந்தேகத்தின் அடிப்படையில்  கைது செய்யப்பட்டு கல்முனை  நீதிமன்ற நீதிவான் முன்னிலையில்   ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

இதனடிப்படையில்   கைதான  சந்தேக நபரான பௌத்த மதகுரு  தொடர்புபட்ட  3 வழக்குகளில்  தலா 3 பேர் வீதம்,  9 பேர் கொண்ட  5 இலட்சம் பெறுமதியான  சரீரப்பிணையில் செல்ல வேண்டும், 

 ஒவ்வொரு மாத இறுதியில்   மீண்டும் அருகில் உள்ள கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு சென்று கையொப்பம் இடுதல், குறித்த வழக்கின் சாட்சிகள்  குடும்பத்தினரை   அச்சுறுத்துதல், வழக்கு தொடர்பிலான தலையீடு செய்யாதிருத்தல் வேண்டும், வெளிநாடு செல்வதற்கு தடை, அதாவது கடவுச்சீட்டினை மன்றிற்கு ஒப்படைத்தல் வேண்டும்,  அவ்வாறு தன்னிடம் கடவுச்சீட்டு  இல்லை எனின்    உரிய தரப்பினரின் உறுதிப்படுத்தி மன்றிற்கு தெரிவிக்க வேண்டும், கிராம சேவகரின் சான்றிதழ் சமரப்பிக்க வேண்டும், என்ற கடும் நிபந்தனையுடன் குறித்த  பௌத்த மதகுரு  பிணையில் விடுவித்து  உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்   இவ்வழக்கு  மீண்டும்   எதிர்வரும்  ஜுன் மாதம் 22 ஆம்    திகதி வரை வழக்கினை  நீதிவான் ஒத்தி வைக்க  உத்தரவிட்டார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .