Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2016 ஜூன் 04 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.அஷ்ரப்கான்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.எல்.அலாவுதீனின் பணிப்புரைக்கமைய, கல்முனை பிரதேசத்திலுள்ள உணவகங்கள் அனைத்தும் வரும் நோன்பு தினத்துக்கு முன்பதாக திடீர் பரிசோதனை செய்யப்படவுள்ளதாக மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் பி.பேரம்பலம் தெரிவித்தார்.
மாவட்ட மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் பி. பேரம்பலம் தலைமையில் பொது சுகாதார பரிசோகர்கள் மற்றும் பிராந்திய உணவு மருந்து பரிசோதகர் எஸ்.தஸ்தகீர் ஆகியோர் அடங்கிய குழுவினால் இப்பரிசோதனை நடைபெறவுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் சம்மாந்துறையில் பிரபல்யமான உணவகங்கள் இழுத்து மூடப்பட்டன. பின் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் நேரடி கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டு அவை மீண்டும் திறக்கப்பட்டன.
அதுபோல், இன்று (04) கல்முனை நகர் புறத்திலுள்ள 13 உணவகங்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன. அதில் எதிர்வரும் திங்கட்கிழமை (06) 7 உணவகங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளன.
இதில் நாங்கள் எதிர்பார்ப்பது நீதிபதியின் அனுமதியுடன் மிகவும் சுகாதாரத்துக்கு கேடான 3 உணவகங்களை மூடுவதற்கான அனுமதி பெறுவதற்காக எதிர்பார்த்திருக்கின்றோம் என்று மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் பி. பேரம்பலம் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .