2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

உணவகங்களில் சோதனை

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 12 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில்; உணவகங்கள், பலசரக்குக் கடைகள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில் நேற்று வியாழக்கிழமை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சோதனை மேற்கொண்டனர்.

இதன்போது 06 உணவகங்கள், 08 சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் 06 பலசரக்குக் கடைகளில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், சுகாதாரத்துக்குக் கேடு விளைவிக்கும் உணவகங்கள் அடையாளம் காணப்பட்டதுடன், அவ்வுணவகங்களின் உரிமையாளர்களும் எச்சரிக்கப்பட்டனர்.

இவ்வுணங்களில் நாளை சனிக்கிழமை மீண்டும் சோதனை மேற்கொள்ளப்படவுள்ளதுடன், அன்றைதினம் அசுத்தமாக இருக்கும் உணவகங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படுமென
கடுமையான அறிவுறுத்தல்களுடன் இரண்டு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டள்ளதாகவும் இதனை அடுத்து மீண்டும்  சனிக்கிழமை மேற்படி கடைகள் சுகாதார பரிசோதனைகள் பேற்கொள்ளப்படுவதுடன் அன்றைய தினம் இவ்வாறு இருக்கும் உணவகங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் கல்முனை மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பீ.பேரம்பலம் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X