2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

உதவி முகாமையாளர் கொலை; சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 19 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

கல்முனைப் பிரதேசத்தில்; அமைந்துள்ள சர்வோதய அபிவிருத்தி நிதிக் கம்பனியின் உதவி முகாமையாளரான பெண் ஒருவரை வெட்டிக் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03ஆம் திகதிவரை சந்தேக நபரைக விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.பயாஸ் றஸாக், இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி காரியாலயத்துக்கு சென்று கடமையாற்றிக்கொண்டிருந்த கல்முனையைச் சேர்ந்த ராஜேஸ்வரன் சுலக்ஷனா (வயது 33) என்பவர்  வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X