2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

உதவி முகாமையாளரின் கொலைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

Princiya Dixci   / 2016 மார்ச் 14 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எல். அப்துல் அஸீஸ் 

அம்பாறை, கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள சர்வோதய நிதி நிறுவனத்தின் உதவி முகாமையாளரைக் கொலை செய்ததாகக் கூறப்படும் நபருக்கு மரண தண்டனை வழங்க வேண்டுமென்பதுடன்,  அவருக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும்  நீதிமன்றத்தில் ஆஜராகக் கூடாதெனவும்; கோரி கல்முனை நகர வீதியில் இன்று திங்கட்கிழமை (14) பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

குளோரி வீதி நற்பிட்டிமுனை, கல்முனையைச் சேர்ந்த ராஜேஸ்வரன் சுலக்ஷனா (வயது 33) என்பவர் கடந்த பெப்ரவரி மாதம்  மேற்படி நிதி நிறுவனத்தில் கடமையிலிருந்தபோது வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அத்துடன், அப்பெண்ணின் கழுத்திலிருந்த தாலிக்கொடியும் அபகரிக்கப்பட்டதாகவும்  பொலிஸார் தெரிவித்திருந்தனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, பல்வேறு கோஷங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள்  எழுப்பியதுடன்,  கொலையாளி எனக் கூறப்படும் நபரின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X