2025 ஜூலை 07, திங்கட்கிழமை

உபகரணங்கள் கையளிப்பு

Niroshini   / 2015 நவம்பர் 12 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை,இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விதவைப் பெண்களுக்கான வாழ்வாதார உதவிகள் மற்றும் பாடசாலைகள்,நிறுவனங்களுக்கான உபகரணங்களை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை நேற்று புதன்கிழமை வழங்கி வைத்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பையின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின் மூலம் பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் தலைமையில் இந்த உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதற்கமைய வாங்காமம் ஓராபிபாசா வித்தியாலத்துக்கு 03 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் நிழற்பிரதி இயந்திரம் மற்றும் பேண்ட் வாத்திய கருவிகள் வழங்கப்பட்டன.

இறக்காமம் றோயல் கல்லூரிக்கு 120,000 ரூபாய் பெறுமதியான நிழற்பிரதி இயந்திரமும் குடுவில் அல்- ஹிறா வித்தியாலத்துக்கு 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான கணினியும் இலுக்குச்சேனை வித்தியாலத்துக்கு நீர் இறைக்கும் இயந்திரம் ஒன்றும் லீடர் அஸ்ரப் வித்தியாலத்துக்கு 125,000 ரூபாய் பெறுமதியான நிழற்பிரதி இயந்திரமும் வழங்கிவைக்கப்பட்டன.

இதேவேளை,இறக்காமம் கலாசார மேம்பாட்டு குழுவுக்கு ரூபாய் 50,000 நிதியொதுக்கீட்டில் சிலம்படிக் குழுக்கான சீருடையும் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும்,100நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் பெண்தலைமைத்துவமாகக் கொண்ட கைம்பெண்குடும்பங்களை வலுவூட்டும் செயற்திட்டத்தில் சிறுவர் அபிவிருத்தி பெண்கள் விவகார அமைச்சின் இலங்கை பெண்கள் பணியகத்தின் ஊடாக சுயதொழில் உதவித்தொகை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .