2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

உயர்கல்வி வழிகாட்டலும் ஆலோசனை கருத்தரங்கும்

Sudharshini   / 2016 ஏப்ரல் 02 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அட்டாளைச்சேனை பெரிய ஜும்ஆ பள்ளிவாசலின் கல்விப் பிரிவு, சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சின் தேசிய உளவளத்துணை மையத்துடன் இணைந்து க.பொ.த (சா/த) பரீட்சையில்  சித்தி பெற்ற மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டலும் ஆலோசனைக் கருத்தரங்கும்  புதன்கிழமை (06) நடைபெறவுள்ளது.

அட்டாளைச்சேனை  பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் கலாசார மாநாட்டு மண்டபத்தில் காலை 8.00 மணி தொடக்கம் 12.00 வரை இந்நிகழ்வு நடைபெறவுள்ளது என பிரதேச செயலக உளவள ஆலோசகரும் இச்செயற்றிட்ட இணைப்பாளருமாகிய மனூஸ் அபூபக்கர் தெரிவித்தார்.

 'குறிப்பாக இக்கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதன் முக்கிய நோக்கம் மாணவர்கள் பெறுபேறுகள் வருவதற்கு முன்னரே உயர்தர பிரிவுகள் தொடர்பான போதிய அறிவு வழிகாட்டல் இல்லாமல் தமக்கான உயர்தர பிரிவுகளைத் தெரிவு செய்து கொண்டு பிரத்தியோக வகுப்புக்களுக்கு செல்கின்றனர்.  இது எதிர்காலத்தில் அவர்களது வாழ்க்கையில் பாரிய செல்வாக்குச் செலுத்தும் என்பதனை பெற்றோர்களோ, மாணவர்களோ அறிந்திருப்பதில்லை' என மனூஸ் தெரிவித்தார்.

'எனவே, தான் இப்படியானதொரு கருத்தரங்கினை மாணவர்களுக்கும் பொற்றோர்களுக்கும் நடாத்த வேண்டுமென எமது கல்விப் பிரிவு திட்டமிட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், துறைசார் நிபுணர்கள் கலந்துகொண்டு கருத்துரை வழங்குவதோடு, அனைத்து பாடங்களிலும் ஏ தர சித்தி பெற்ற மாணவர்கள் பாராட்டி கௌரவிப்படவுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X