Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 மே 14 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியில் கிழக்கு மாகாண சபையினால் அமுல் நடத்தப்படவுள்ள அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவிருக்கும் 600 கிலோ மீட்டர் வீதிகள் தொடர்பான உயர்மட்டக்கூட்டம் நேற்று மாலை அக்கரைப்பற்று பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் தலைமையில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில், அம்பாறை மாவட்ட மாகாண சபை உறுப்பினர்கள், கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், 12 பிரதேச சபைகளின் செயலாளர்கள் ஆகியோர் லந்துகொண்டு அம்பாறை மாவட்ட தமிழ், முஸ்லிம் பிரதேச சபைகளுக்குட்பட்ட பிரிவுகளில் நிர்மாணிக்கப்படவுள்ள விதிகள் பற்றிய மிக விரிவான கலந்துரையாடலை நடத்தினர்.
அதன் அடிப்படையில் 12 பிரதேச சபைகளுக்குள் மேற்கொள்ளவுள்ள வீதிகளின் அளவுகளும் இக்கலந்துரையாடலில் பிரிக்கப்பட்டது. அதன் விபரம் வருமாறு:
01. காரைதீவு பிரதேச சபை - 07 கி.மீ
02. இறக்காமம் பிரதேச சபை - 08 கி.மீ
03. திருகோவில் பிரதேச சபை -08 கி.மீ
04. நாவிதன்வெளி பிரதேச சபை - 08 கி.மீ
05. ஆலையடிவேம்பு பிரதேச சபை - 08 கி.மீ
06. நிந்தவூர் பிரதேச சபை - 08 கி.மீ
07. அட்டாளைச்சேனை பிரதேச சபை - 09 கி.மீ
08. சம்மாந்துறை பிரதேச சபை - 09 கி.மீ
09. பொத்துவில் பிரதேச சபை - 09 கி.மீ
10. அக்கரைப்பற்று பிரதேச சபை - 07. கி.மீ
11. அக்கரைப்பற்று மாநாகர சபை - 8.5 கி.மீ
12. கல்முனை மாநாகர சபை - 8.5 கி.மீ
மீதமானவை சிங்களக்கிராமங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
54 minute ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
4 hours ago
7 hours ago