2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

உள்ளூர்த் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாறாம்பொல காட்டுப் பிரதேசத்துக்கு வேட்டையாடுவதற்குச் சென்றதாகக் கூறப்படும் 31 வயதுடைய ஒருவர் உள்ளூர்த் துப்பாக்கியுடன் இன்று புதன்கிழமை காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், இந்தச் சந்தேக நபரிடமிருந்து உள்ளூர்த் துப்பாக்கியை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, இச்சந்தேக நபர் விசேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டு, தம்மிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .