2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

உளவளத்துணை பயிற்சிக் கருத்தரங்கு

Niroshini   / 2015 நவம்பர் 24 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

ஒலுவில் அல்-ஹம்றா மகாவித்தியாலயத்தில் இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான 'பரீடசையை எவ்வாறு இலகுவாக எதிர் கொள்ளல்' எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட உளவளத்துணை பயிற்சிக் கருத்தரங்கு நேற்று திங்கட்கிழமை ஒலுவில் அல்-ஹம்றா மாகா வித்தியாலய ஆராதணை மண்டபத்தில் நடைபெற்றது.

இப்பயிற்சி கருத்தரங்கில் வளவாளராக அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச உளவளத்துணை அலோசகர் ஏ.மனூஸ் கலந்து கொண்டார்.

பாடசாலை சாதாரணதர பிரிவு வலயத்தலைவர் இஸட். எம்.நிஸாமுடீன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் பரீட்சையை எவ்வாறு இலகுவாக எதிர் கொள்ளல், பரீட்சையின் போது ஏற்படக் கூடிய அச்ச நிலையை போக்குதல், வினாக்களுக்கு இலகுவாக பதிலளித்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பாடசாலை சாதாரண தரப்பிரிவு பகுதி ஆசிரியர்களான ஐ.ஏ.ஜீமான், எம்.சி.எம்.பாரிஸ் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X