Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 பெப்ரவரி 20 , மு.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும், சாய்ந்தமருது சீ பிரிஸ் கூட்ட மண்டபத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெறவுள்ளதாக சம்மேளனத்தின் செயலாளர் ரீ.கே. றஹ்மத்துல்லா தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷணம் மீரா எஸ். இஸ்ஸடீன் தலைமையில் இடம்பெறவுள்ள இக்கூட்டம், காலை 10.00 மணிக்கு சமய அனுஷ்டானத்துடன் ஆரம்பிக்கப்பட்டு, முதல் நிகழ்வாக கடந்த வருடம் மரணித்த ஊடகவியலாளர்களுக்கான இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலியுடன் விசேட துஆப் பிரார்த்தனையும் இடம்பெறவுள்ளது.
இதனையடுத்து கடந்த வருட செயலாளர் அறிக்கை, பொருளாளர் அறிக்கை, தலைவர் உரை மற்றும் அங்கத்தவர்களின் கருத்துரையை அடுத்து சம்மேளனத்தின் புதிய நிர்வாகத்தினர் தெரிவு இடம்பெற்றதையடுத்து பி.ப 2.00 மணியளவில் இக்கூட்டம் நிறைவடையவுள்ளது என்றார்.
மேலும், இந்த பொதுக்கூட்டத்துக்கு சங்கத்திலுள்ள சகல ஊடக அங்கத்தவர்களும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
31 minute ago
57 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
57 minute ago
5 hours ago