2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

எருமை மாடுகள் திருட்டு ; மூவர் கைது

Niroshini   / 2015 செப்டெம்பர் 13 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை மத்திய முகாம் வயல் பிரதேசத்தில் மேய்ச்சலுக்கு சென்ற 15 எருமை மாடுகளை கடத்தி திருடிச் சென்ற சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்களை நேற்று சனிக்கிழமை இரவு தமன்ன பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நிந்தவூர்,ஏறாவூர் பகுதிகளைச் சேர்ந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், திருடப்பட்ட எருமை மாடுகளில் ஏற்கனவே 6 எருமை மாடுகள் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு தமன்ன பொலிஸ் பிரிவில் மேலும் 5 எருமை மாடுகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களை இன்று ஞாயிற்றுக்கிழமை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X