Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 மே 29 , மு.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா
கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட ஐந்து வீதிகளுக்கு புதிய பெயர்கள் சூட்டுவதற்காக முன்வைக்கப்பட்ட பிரேரணைகள், மாநகர சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வு, சனிக்கிழமை (28) மாநகர முதல்வர் எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்றது. இதன்போது மாநகர சபை உறுப்பினர் சிவஞானம் ஜெயக்குமார், இப்பிரேரணைகளை முன்வைத்து கல்வி, சமூக, மத ரீதியில் பாரிய பங்களிப்புகளைச் செய்துள்ள பெரியோரை கௌரவப்படுத்தும் வகையில் அவர்களின் பெயர்களை ஐந்து வீதிகளுக்கும் சூட்டுவதற்கு முன்மொழிவதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், கல்முனை -அக்கரைப்பற்று நெடுஞ்சாலையிலிருந்து கிழக்காக கோவில் குறுக்கு வீதிவரை செல்லும் வீதிக்கு கல்முனை மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கே.ஏகாம்பரத்தின் பெயரையும் சேனைக்குடியிருப்பு முத்துவிநாயகர் கோவிலுக்கு முன்பாகவிருந்து மேற்கு நோக்கி மாரியம்மன் கோவில் வீதிவரையான வீதிக்கு முன்னாள் அதிபர் அமரர் சங்கரப்பிள்ளை நாகமணியின் பெயரையும் சேனைக்குடியிருப்பு பாடசாலை வீதியிலிருந்து செல்லும் குறுக்கு வீதிக்கு முன்னாள் அதிபர் அமரர் ஆறுமுகம் அழகைய்யாவின் பெயரையும் கிட்டங்கி வீதியில் தொடங்கி தெற்காக சேனைக்குடியிருப்பு வயல் வீதிவரையான வீதிக்கு ஞானசோதிடர் முருகேசுப்பிள்ளை நல்லதம்பியின் பெயரையும் சேனைக்குடியிருப்பு கலைமகள் வீதியிலிருந்து மேற்காக மத்திய வீதிவரையான வீதிக்கு கோவில் பரிபாலன சபைத் தலைவர் ஆறுமுகம் ஞானமுத்துவின் பெயரையும் சூட்டுவதற்கான பிரேரணைகள்; நிறைவேற்றப்பட்டுள்ளன.
பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும், இவற்றை விளம்பரப்படுத்தி அந்தந்த வீதிகளை அண்டி வசிக்கும் பொதுமக்களின் கருத்துகள், ஆட்சேபனைகளுக்காக ஒரு மாதகால அவகாசம் வழங்கப்படும் எனவும் இதன் பின்னரே வர்த்தமானி அறிவித்தலுக்காக கிழக்கு மாகாண சபைக்கு அனுப்பப்படும் எனவும் மாநகர சபை முதல்வர் தெரிவித்தார்.
இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சபைச் செயலாளரையும் அவர் பணித்துள்ளார்.
44 minute ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
4 hours ago
7 hours ago