Editorial / 2022 ஜனவரி 09 , பி.ப. 01:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.எம்.ஷினாஸ்
அம்பாறை, நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளை கடத்திச் சென்ற 34 வயது நபர் ஒருவர், அட்டப்பள்ளம் சந்தியில் வைத்து நேற்றிரவு (08) விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார்.
பெரியநீலாவணை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து, அப்பகுதிக்கு சிவில் உடையில் விரைந்த அதிரடிப் படையினர், குறித்த நபரைக் கைது செய்தனர்.
விற்பனைக்காக கொண்டு செல்ல முற்பட்ட 30 கிராம் ஐஸ் போதைப்பொருள் அவரிடமிருந்து கைது செய்யப்பட்டதுடன், மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த நபர் நீண்ட காலமாக போதைப்பொருள் கடத்திச் சென்று விற்பனையில் ஈடுபட்டு வருபவர் எனப் படையினர் தெரிவிக்கின்றனர்.
மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
6 minute ago
17 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
17 minute ago
46 minute ago