2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

ஒரே நாளில் ஐவர் கைது

Princiya Dixci   / 2016 ஜூன் 01 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன் 

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், கஞ்சாவை தங்கள் வசம் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இருவரும், நீதிமன்றத்தால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த இரண்டு பெண்கள், ஒரு ஆண் என்று மொத்தம் ஐந்து பேரை, இன்று புதன்கிழமை (01) கைது செய்ததாக, அக்கரைப்பற்றுப் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, மேற்படி கஞ்சா வைத்திருந்த, அக்கரைப்பற்று முதலாம் பிரிவு பிரதேசத்தில் 67 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை 2 கிராம் கஞ்சாவுடனும் அதே பகுதியில் 4 கிராம் கஞ்சா வைத்திருந்த 47 வயதுடைய நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக சந்தேகநபர்களாக இணங்காணப்பட்டு, நீதிமன்றத் தவணைகளுக்கு வருகை தராமையால், நீதிமன்றத்தால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த ஆலையடிவேம்பு பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவரையும் பெண்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X