Editorial / 2018 மார்ச் 26 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
றியாஸ் ஆதம்
அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நாளை (28) காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளதாக, அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப் தெரிவித்தார்.
இக்கூட்டம், பிரதி சுகாதார அமைச்சர் பைசல் காசீம், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோரின் இணைத்தலைமையில் இடம்பெறவுள்ளது.
இதன்போது அக்கரைப்பற்று பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவித்தித் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளனவென, பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
மேற்படி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் அக்கரைப்பற்று மாநகர, பிரதேச சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட மேயர், பிரதி மேயர், தவிசாளர் உட்பட உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
19 minute ago
27 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
27 minute ago
38 minute ago