Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 செப்டெம்பர் 16 , பி.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்நாட்டில் சுதந்திரத்துக்குப் பின்னர் நசுக்கப்பட்டு வரும் சமூகங்களாகவுள்ள தமிழர்களும் முஸ்லிம்களும், ஒரே சிந்தனைப் போக்கில் ஒற்றுமைப்படுவதே, முதிர்ந்த அரசியலாகவும் உரிமைகளுக்கான திறவு கோலாகவும் அமையும் என, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மறைந்த மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரபின், 18ஆவது நினைவு தினத்தையிட்டு, இன்று (16) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சிறுபான்மைகளின் பலத்தை, பெரும்பான்மை ஆட்சியாளர்கள் மதிக்க வேண்டும் என்றும் அதன்மூலம், வேற்றுமையில் ஒற்றுமை காணப்பட வேண்டும் என்பதையும் அஷ்ரப், செயலிலும் நிரூபித்துக் காட்டினார் என்று குறிப்பிட்ட முன்னாள் முதலமைச்சர், சிறுபான்மையினர் தங்களுக்குள்ள உரிமைகளின் அடிப்படையில், பரஸ்பரம் மதிக்கப்பட வேண்டுமென்ற என்ற மந்திரத்தை, அஷ்ரப் கொண்டிருந்தார் என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து அவர், “மறைந்த தலைவர் அஷ்ரப் விட்ட இடத்திலிருந்து, நாம் நமது சிந்தனைப் போக்குகளுக்குச் செயல்வடிவம் கொடுக்க வேண்டும். சமகால அரசியலில் உண்மை எது, பொய்மை எது என்ற கறுப்பும் வெள்ளையும், மங்கலானதுமான காலகட்டத்தில், நாம் எதிர் வினையாற்றிக் கொண்டிருக்கின்றோம். உண்மையில், சிறுபான்மை இனங்கள் கடந்தகால பிளவுபட்ட அரசியல் போக்கிலிருந்து விரைந்து விடுபட முயல வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“இன்னமும் பேரினவாத பிரித்தாளும் அரசியலின் சூத்திரங்களைப் புரிந்து கொள்ளாதவர்களாக, புத்தி பேதலித்துப் போய் தொடர்ந்தும் பிளவுபட்டு நிற்போமேயானால், இந்த நாட்டில் போக்கிடமின்றி அலைய நேரிடும்” என்று அவர், மேலும் எச்சரித்துள்ளார்.
53 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago
2 hours ago