2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

ஒலுவில் துறைமுக அபிவிருத்தி; தனிநபர் பிரேரணை சமர்ப்பிக்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 04 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் தனிநபர் பிரேரணையை எதிர்வரும் மே மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்; தலைவரும் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

ஒலுவில் கிராமத்துக்கு இன்று திங்கட்கிழமை  விஜயம் செய்து ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'ஒலுவில் துறைமுகத்தை எதிர்காலத்தில் அபிவிருத்தி செய்து சர்வதேச தரத்துக்கு கொண்டுவருவதற்கு இதனுடன் சம்பந்தப்பட்ட அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளேன்.

துறைமுக நிர்மாணிப்புக்காக காணி சுவீகரிக்கப்பட்டு இதுவரையில் நட்டஈடு வழங்கப்படாத காணி உரிமையாளர்களுக்கு மிக விரைவில் நட்டஈடு  வழங்குவதற்கும் உரியவர்களிடம் கலந்துரையாடிள்ளேன்.

மேலும், ஒலுவில் கடலரிப்பை நிரந்தரமாக இல்லாமல்ச் செய்யும் வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்படும்' என்றார்.

'இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கும் பொருட்டு ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துடன் இணைந்தவாறு கைத்தொழில் பேட்டையை உருவாக்குதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' எனவும் அவர் கூறினார்.  
 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X