2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

ஒலுவில் துறைமுகம் ஊடாக கப்பல் போக்குவரத்தை மேற்கொள்ள நடவடிக்கை

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 23 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்திசெய்து கப்பல் போக்குவரத்து மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென கப்பல்த்துறை மற்றும் துறைமுகங்கள் சேவைகள் பிரதியமைச்சர் நிஸாந்த முதுகெட்டிகம தெரிவித்தார்.

ஒலுவில் துறைமுகத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை விஜயம் செய்த பிரதியமைச்சர், ஒலுவில் கடற்கரையோரத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பையும் பார்வையிட்டுள்ளார்.  இதன்போதே அவர் இதனைக் கூறினார்.

துறைமுக நிர்மாணிப்புக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்களுக்கு  முழுமையான நஷ்டஈடு  வழங்குவதற்கான நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறினார்.

பிரதியமைச்சருடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், முன்னாள் உப தவிசாளர் எல்.அமானுல்லா மற்றும் அமைச்சின் உயரதிகாரிகளும் வருகை தந்தனர்.

தற்போது ஒலுவில் துறைமுகத்தில் மீன்பிடித்துறைமுகம் மட்டுமே இயங்கிவருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X