2025 ஜூலை 02, புதன்கிழமை

ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தை அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கு நடவடிக்கை

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 25 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா 

இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழுள்ள ஒலுவில் துறைமுகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மீன்பிடித் துறைமுகத்தை மீன்பிடி அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, இன்று ஞாயிற்றுக்கிழமை (25) தெரிவித்தார்.

ஒலுவில் துறைமுக சுற்றுலா விடுதியில் நடைபெற்ற பிரதேச ஆழ்கடல் மீனவர்களுடனான கலந்துரையாடலின் போதே இவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இப்பிரதேச மீனவர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளேன். அந்த வகையில் அம்பாறை மாவட்ட மீனவர்கள் ஆழ் கடலுக்குச் சென்று தொழிலில் ஈடுபடுவதற்கு அனுமதியை வழங்குவதற்கு ஆவண செய்வதோடு மீனவர்களுக்கு குறைந்த வட்டியுடன் கடன் வசதிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுப்பேன் என வாக்குறுதியளித்தார்.  
 
ஒலுவில் பிரதேச மீனவர்கள் நீண்ட நாட்களாக பல பிரச்சிணைகளுக்கு முகங்கொடுத்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இதனை நிவர்த்தி செய்வதற்கு குறிப்பாக ஆழ் கடல் மீனவர்களுக்கு கடலில் துரப் பிரதேசங்களுக்கு சென்று மீன் பிடிப்பதற்கான அனுமதி வழங்கப்படும்.

துறைமுக அதிகார சபையின் கீழுள்ள மீன்பிடித்துறைமுகத்தை தனியாக பிரித்தெடுப்பதன் மூலம் மீனவர்களின் தொழிலை விருத்தி செய்து கூடுதலான வருவாயை பெற்றுக்கொள்ள முடியுமென்றார்.

பிரதி அமைச்சர்களான பைசால் காசிம், எம்.எஸ்.அமீர் அலி, அமைச்சின் உயர் அதிகார் பலர் இதில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .