Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல்பீடத்துக்கு குவைத் நாட்டின் நிதியுதவியில் இலங்கை ரூபாவில் 263 மில்லியன் செலவில் 5,000 மாணவர்கள் ஒரேநேரத்தில் கல்வி கற்கக்கூடியதாக 04 மாடிகளைக் கொண்ட கட்டடம் ஒலுவில் வளாகத்தில் நிர்மாணிக்கப்படுவதாக அப்பல்கலைக்கழக உபவேந்தர், பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் தெரிவித்தார்.
விரிவுரையாளர் பற்றாக்குறை, ஆய்வுகூட வசதியின்மை மற்றும் மாணவர்களை வேறு பல்கலைக்கழக பொறியியல்பீடங்களுக்கு மாற்றவேண்டும் உள்ளிட்ட கருத்துகளை முன்வைத்து ஆர்ப்பாட்டங்களையும் வகுப்பு பகிஷ்கரிப்பையும் தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியல்பீட மாணவர்கள் அண்மைக்காலமாக மேற்கொண்டுவருகின்றனர்.
இது தொடர்பில் ஒலுவில் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (01) நடைபெற்ற ஊடகவிலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், '2012ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இப்பொறியியல்பீடமானது, ஆய்வுகூட மற்றும் நூலக வசதிகளைக் கொண்டுள்ளன. மேலும், ஆய்வுகூட வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கத்தினால் 314 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான வேலைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், 15 நிரந்தர விரிவுரையாளர்களையும் 20 க்கும் மேற்பட்ட வருகைதரு பகுதிநேர விரிவுரையாளர்களையும் கொண்டு இப்பொறியியல்பீட மாணவர்களுக்கான விரிவுரைகள் மேற்கொள்ளப்படுவதுடன், 14 மாவட்டங்களிலிருந்தும் இப்பொறியியல்பீடத்துக்கு மாணவர்கள் தெரிவுசெய்யப்படுகின்றனர்' என்றார்.
'இவ்வாறிருக்க, தங்களின் பிரச்சினைகளை நிர்வாகத்திடம் தெரிவிக்காமல், சில மறைமுக சக்திகளிடம்; பிரச்சினைகளை முன்வைத்து இப்பல்கலைக்கழக வளர்ச்சிக்கு களங்கம் ஏற்படுத்த மாணவர்கள் முனைகின்றனர். மாணவர்களின் எதிர்காலம் கருதி பல்கலைக்கழகமும் பல்கலைக்கழகமானியங்கள் ஆணைக்குழுவும் உயர்கல்வி அமைச்சும் இப்பீடத்தை அபிவிருத்தி செய்யும் நிலையில், வகுப்பு பகிஷ்கரிப்பை கைவிட்டு வழமையான கல்வி நடவடிக்கைக்கு திரும்புமாறு மாணவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago