2025 மே 21, புதன்கிழமை

கைகலப்பில் ஒருவர் மீது கத்திகுத்து: சந்தேக நபர் கைது

Niroshini   / 2016 ஏப்ரல் 19 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்    

அக்கரைப்பற்று, வம்மியடி பிரதேசத்தில் திங்கட்கிழமை (18) பிற்பகல்  இருவருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.

அட்டாளைச்சேனை-15ஆம் பிரிவு மஸ்ஜித்துல் வீதியைச் சேர்ந்த ஆதம் லெப்பை அஸீசுர் றகுமான் என்பவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த நபர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைகலப்பில் ஈடுபட்ட இருவருவரில் ஒருவர் மற்றவரிடம் இருந்து காணி ஒன்றை விலைக்கு பெற்றுள்ளார். அக்காணி தொடர்பாக இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடே கைகலப்பாகமாறி கத்தி குத்தில் முடிந்துள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X