Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஜனவரி 07 , மு.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
பிரதேச மட்டத்தில் இடம்பெறுகின்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கு அரசாங்கத் திணைக்களம் மற்றும் நிறுவனங்களின்; சார்பில் பொறுப்புக் கூறுகின்ற அதிகாரிகள் சமூகமளிக்க வேண்டுமென சுகாதாரப் பிரதியமைச்சரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத்; தலைவருமான பைஷால் காசீம் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'மக்களின் நலன் நலன் கருதி அரசாங்கம் கொண்டுவரும் திட்டங்கள் அசமந்தமான அதிகாரிகளின் செயற்பாடுகளினால் பாதிக்கப்படுவதை இனிவரும் காலத்தில் தவிர்த்துக்கொள்ளவதற்கான நடவடிக்கையை நாம் முன்னெடுக்க வேண்டும்.
மக்கள் நலன் கருதி அரசியல்வாதிகளினால் கொண்டுவரும் திட்டங்களுக்கு அரசாங்கத் திணைக்களங்களின் பொறுப்புக் கூறும் அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்காவிடின், அது எமது மக்களுக்கு நாம் செய்யும் அநியாயமாகக் கருத வேண்டும்' என்றார்.
'எனவே, பொறுப்புக்கூறும் அதிகாரி சமூகமளிக்காமல் வேறு உத்தியோகஸ்;தர்கள் இனிவரும் காலத்தில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கு சமூகமளிப்பராயின், குறித்த அதிகாரியை கூட்டத்திலிருந்து வெளியேற்ற வேண்டி வரும்' எனவும் அவர் தெரிவித்தார்.
36 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
57 minute ago
1 hours ago