2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

காணி உரிமைப்பத்திரங்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2016 ஜூன் 01 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கரைப்பற்று பிரதேச செயலகப்பிரிவிலுள்ள அரசாங்க காணிகளில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கான காணி உரிமைப்பத்திரங்கள்; வழங்கும் நடவடிக்கைகளை அக்கரைப்பற்று பிரதேச செயலகம் மேற்கொண்டுள்ளது.  

முதற்கட்டமாக காணி உரிமைப்பத்திரம் இன்றி அரச காணிகளில் செயற்பட்டுவரும் ஏழு பாடசாலைகளுக்கு காணி உரிமைப் பத்திரங்கள் நேற்று  செவ்வாய்க்கிழமை அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டன.
அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லெத்தீப், குறித்த பாடசாலை அதிபர்களிடம் உரிமைப் பத்திரங்களை வழங்கினார்.

அக்கரைப்பற்று அஷ்-ஷஹ்றா வித்தியாலயம், இலுக்குச்சேனை  அல்-ஹுதா விததியாலயம்,  ஆலிம் நகர் அஷ்-ஷிபாயா வித்தியாலயம், இசங்கணிச் சீமை அல்- கமர் வித்தியாலயம் ஆகியவற்றுக்கே உரிமைப் பத்திரங்கள் வழங்கப்பட்டன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X