2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

காணி உறுதிகள் வழங்குமாறு அஷ்ரப் நகர் குடியிருப்பாளர்கள் வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 09 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

சுனாமியால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த நிலையில், ஒலுவில் அஷ்ரப் நகரில்; குடியமர்;த்தப்பட்டுள்ள சுனாமி வீட்டுத்திட்டக் குடியிருப்பாளர்கள் காணி உறுதிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒலுவில் பிரதேசத்தில்; 04ஆம், 06ஆம், 07ஆம் பிரிவுகளில் கரையோரத்தில் வசித்த சுமார்; 65 குடும்பங்கள் சுனாமிப் பாதிப்புக்குள்ளான நிலையில் அஷ்ரப் நகரில்  குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு குடியமர்த்தப்பட்டுள்ள தங்களுக்கு இதுவரையில் காணி உறுதிகள் வழங்கப்படவில்லை. இதனால், இன்னல்களை எதிர்கொள்வதாகவும் இந்த மக்கள் தெரிவித்தனர்.

தங்களின் காணிகளுக்கான எல்லை சரியான முறையில்  இடப்படவில்லை. இதனால், காணி  எல்லை தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதுடன், சுற்றிவர வேலி அடைக்க முடியாதுள்ளதாகவும் இவர்கள் கூறினர்.  

இந்த விடயம் தொடர்பில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபாவிடம்  புதன்கிழமை கேட்டபோது, 'மேற்படி சுனாமி வீட்டுத்திட்டக் குடியிருப்பாளர்களுக்கு காணி உறுதிகள்  வழங்குவதற்கான சகல வேலைகளும் பூர்த்தி செய்யப்பட்டு காணி ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இவர்களுக்கு காணி உறுதிகள் வழங்கப்படுமெனவும்'  எனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X