2025 மே 21, புதன்கிழமை

காணாமல் போனவர்களுக்கு தீர்வைத்தேடும் கலந்துரையாடல்

Gavitha   / 2016 பெப்ரவரி 29 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்  

காணாமல் போனவர்கள் தொடர்பில் உரிய தீர்வைப் பெற்றுத்தருமாறு அரசை வலியுறுத்தும் நோக்கில், காணாமல் போனோர் ஒன்றியம் ஏற்பாடு செய்த  காணாமல் போனவர்களின் உறவினர்களுடனான கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) அக்கரைப்பற்று வை.எம்.சி.ஏ.மண்டபத்தில் இடம்பெற்றது.

ஒன்றியத்தின் தலைவர் பிரிட்டோ பெர்ணாந்து தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டனர்.

ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை மீறல் தொடர்பிலான அமர்வில், காணாமல் போனவர்கள் தொடர்பில் ஆராய்வதற்கான அழுத்தத்தை கொடுக்கும் முகமாகவும் அதேவேளை அதனை நடைமுறைப்படுத்த அரசுக்கு  பலத்தையும் ஆதரவை வழங்கும் முகமாகவும் மார்ச் மாதம் 30ஆம் திகதி அக்கரைப்பற்றில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக விளக்கும் வகையில், இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வடக்கிலும் தெற்கிலும் உள்ள சிவில் அமைப்புக்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், இது தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகளை கடந்த காலங்களில் மேற்கொண்டிருந்தாலும்  கிழக்கில் போதியளவு செயற்பாடுகள் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என்று இதன்போது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் எதிர்காலத்தில் முன்னின்று செயற்படும் வகையில், கிராம மட்டத்தில் பல குழுக்கள் நியமிக்கப்பட்டதுடன் இயலுமானவரை இவ்வருட இறுதிக்குள் உரிய இலக்கை அடைந்து கொள்ள முயற்சிப்போம் என்றும் கருத்து வெளியிடப்பட்டது.

மேலும் எதிர்காலத்தில் இவ்வாறான இழப்புக்கள் ஏற்படாது செயற்பட அனைவரும் ஒன்றிணைந்து உறுதிபூண்டு செயற்படுவோம் என்றும் அதன்போது உறுதியளிக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .