Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 மார்ச் 21 , மு.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்,எஸ்.எம்.அறூஸ்
'முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டில், உலமாக்களை மேடையில் வைத்துக்கொண்டு குமரிகளின் குத்தாட்டத்தை அரங்கேற்றி குர்ஆன் ஹதீத் யாப்பை கேவலப்படுத்தியுள்ளதுடன் இஸ்லாத்தில் அதிக பிடிப்புக்கொண்ட பாலமுனை மக்களையும் முஸ்லிம் காங்கிரஸ் அசிங்கப்படுத்திவிட்டது' என உலமா கட்சித் தலைவர் கலாநிதி முபாறக் மௌலவி குறிப்பிட்டார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,
'கோடிக் கணக்கில் செலவு செய்து ஒரு கட்சியின் மாநாடு நடத்தப்படும் போது அக்கட்சி பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் சாத்தியமான பிரச்சினகளுக்கு தீர்வுகள் காணப்படுத்துவதே கட்சியின் அரசியல் வெற்றியாகும். இதனை விடுத்து மக்களிடம் தலைகளை மட்டும் காட்டுவது வெற்றியல்ல.
முஸ்லிம் காங்கிரஸின் மேற்படி மாநாட்டுக்கு கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சுட்டிக்காட்டி, அவற்றில் சிலவற்றுக்காவது தீர்வை பெற முயற்சித்திருக்கலாம். அதனை விடுத்து ஹக்கிம் என்ற தனி மனித புகழ்பாடும் வகையிலேயே இம்மாநாடு நடைபெற்றது.
இதிலிருந்து முஸ்லிம்கள் படு மோசமாக ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பது தெளிவாக புரிகின்றது.' என்றார்.
1 hours ago
3 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
5 hours ago
9 hours ago