2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கோப்பிக் கொட்டையில் கலப்படம்: நபருக்கு ரூ.5,000 அபராதம்

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.எஸ்.எம். ஹனீபா

அக்கரைப்பற்று நகரில் பாவனைக்குதவாத கலப்படம் செய்யப்பட்ட கோப்பிக் கொட்டை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட  நபருக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதித்து அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.எல்.ஏ. றஸீட், நேற்று புதன்கிழமை (09) தீர்ப்பளித்தார். 
 
அக்கரைப்பற்று பிரதேசத்தில் கடந்த நவம்பர் மாதம் 11ஆம் திகதி பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது, பாவனைக்குதவாத 05 கிலோகிராம் கோப்பிக் கொட்டையை கைப்பற்றியதுடன், குறித்த நபருக்கு எதிராக  நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
 
இவ்வழக்கு விசாரணை அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற பதில் நீதவானும், நீதவான் நீதிமன்ற பதில் நீதவானுமாகிய எஸ்.எல்.ஏ. றஸீட் முன்னிலையில் நேற்று (09) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் மேற்கண்டவாறு தீர்ப்பளித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .