Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எம்.அறூஸ்
அம்பாறை மாவட்டத்திலுள்ள தெரிவுசெய்யப்பட்ட கால் நடை உற்பத்திப் பயனாளிகள் 50 பேருக்கு தேவையான உள்ளீட்டுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை காரைதீவு அரச மிருக வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இடம்பெற்றது.
மாவட்ட கால்நடை உற்பத்தித் திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் டொக்டர்.எம்.ஏ.எம்.நதீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய, நீர்ப்பாசன, கால்நடை அபிவிருத்தி அமைச்சர் கி.துரைராஜசிங்கம் பிரதம அதிதியாகவும் மாகாண சபை உறுப்பினர் பி.கலையரசன், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் கே.சிவானந்தன், கால்நடை மிருக வைத்திய மாகாணப் பணிப்பாளர் டொக்டர்.எம்.ஏ.மொஹமட் பாஸி, மேலதிக பிரதிப் பணிப்பாளர் டாக்டர்.எம்.சீ.எம்.ஜுனைட் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, பால் கறக்கும் இயந்திரம், நீர்ப்பம்பிகள், புல் வெட்டும் இயந்திரம், பால் சூடாக்கும் இயந்திரம், சைக்கிள்கள், நீர்த்தாங்கிகள் போன்றவற்றுடன் தலா பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இங்கு மாகாண அமைச்சர் கே.துரைராச சிங்கம் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்,
கபடத்தனமான அரசியல்வாதிகளின் கடைசிப் புகலிடம் தேசப்பற்று. சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டு காலமாக முன்வைக்கப்பட்டு அதனுடைய நியாயம் உணரப்பட்டு அத்துரலிய ரத்ன தேரர் அத்தகையவர்கள் கூட விடுதலை செய்யப்பட வேண்டியது நியாயமானது என்று சொல்லுகின்ற இந்த நேரத்தில், மஹிந்த சொல்லுகின்றார், இவர்களை விடுதலை செய்து விட்டால் இந்த நாடு அழிந்து விடும் என்று.
இவ்வாறான கொடூரம் இன்னும் இருக்கின்ற போது இந்த ஈழமாதா ஒரு போதும் சிரிக்கமாட்டார். இவ்வாறான பிள்ளைகளைப் பெற்று விட்டோமே என்று வேதனைப்படுவாள். எனவே இவ்வாறான நிலைமைகளை இல்லாமல் செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago