2025 மே 20, செவ்வாய்க்கிழமை

குருந்தையடி வீட்டுத்திட்டத்தின் மலசலகூடக்குழி நிரம்பியுள்ளதால் சுகாதாரச் சீர்கேடு

Suganthini Ratnam   / 2016 ஜூன் 14 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

அம்பாறை, கல்முனைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட குருந்தையடிக் கிராமத்தில்; அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள தொடர்மாடி வீட்டுத்திட்டத்தின் மலசலகூடக்குழி நிரம்பிவழிந்து அதன் கழிவுநீர் அங்குள்ள வடிகானில் கலப்பதால், சுகாதாரச் சீர்கேட்டுக்கு உள்ளாகியுள்ளதாக மேற்படி வீட்டுத்திட்ட மக்களும் அயல் வீடுகளில் வசிப்பவர்களும் தெரிவித்தனர்.  

2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் காரணமாக கல்முனைப் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட 180 குடும்பங்களுக்கு 2009ஆம் ஆண்டு பின்லாந்து செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் இந்த வீட்டுத்திட்டம் அமைத்துக்கொடுக்கப்பட்டது.
இந்த மலசலகூடக்; குழியிலிருந்து துர்நாற்றம் வீசுவதால் தங்களால் இருக்க முடியவில்லை. மாநகர சபைக்கு தாம் வரி செலுத்தி வருவதாகவும் ஆகவே, இதைச்  சுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கையை மாநகர சபை எடுக்க வேண்டும் அயலில் வசிக்கும் பொதுமக்கள் கூறினர்.

இது தொடர்பில் கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஜே.லியாகத் அலியிடம் இன்று செவ்வாய்க்கிழமை கேட்டபோது, குருந்தையடி வீட்டுத்திட்டம் தனியாருக்குச் சொந்தமானது என்பதால் சுகாதாரச் சீர்கேட்டை நிவர்த்தி செய்யும்; பொறுப்பு உரிய வீட்டுத்திட்ட வசிப்பவர்களுக்கே உள்ளது' எனக் கூறினார்.

இது தொடர்பில் கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலாளர் கே.லவநாதனிடம் கேட்டபோது, 'எதிர்வரும் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X