2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

காரும் மோட்டார் சைக்கிள்களும் தீக்கிரை

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 10 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் மௌலானா

அம்பாறை, கல்முனை சாஹிப் வீதியை அண்டி அமைந்துள்ள வீடொன்றின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள கூடாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரொன்றும் மூன்று மோட்டார் சைக்கிள்களும் இனந்தெரியாதோரினால் தீக்கிரையாக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸில் அவ்வீட்டு உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.

தங்க வியாபாரத்தில் ஈடுபடுகின்ற வர்த்தகப் பிரமுகர் ஒருவரின் வீட்டிலேயே இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இத்தீ வைப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால், வீட்டின் முன்பகுதியும் தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X