Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Sudharshini / 2016 ஏப்ரல் 02 , மு.ப. 08:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்கென அரசாங்கத்தினால் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என அட்டாளைச்சேனை பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்; எம்.ஏ. அன்சார்; தெரிவித்தார்;.
நல்லாட்சி அரசாங்கத்தின் 'கிராம இராஜிய' திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர்; பிரிவுக்குட்பட்ட பாலமுனை கிராமத்தில் அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டங்களை இனம் காண்பதற்கான கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (01) மாலை பாலமுனை அல்-ஹிதாயா பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்;.
அங்கு தொடர்;ந்து அவர் உரையாற்றுகையில்,
'இராஜிய திட்டத்தின் கீழ் பிரதேச செயலக ரீதியாக 2016ஆம் ஆண்டில் அமுல்படுத்த வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள், ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகள் தோறும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு கிராமத்தில் மக்களுக்கு முக்கியமாக தேவைப்படும் அபிவிருத்தி திட்டங்களை பொது மக்களே இனங்கண்டு முன்வைக்க வேண்டும்.பொது மக்களின் வேண்டுகோளுக்கினங்கவே அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதனால், வேலைத் திட்டங்களை விரைவாகவும்; சிறப்பாகவும் செய்து முடிக்க முடியும்.
ஒரு கிராமத்தின் வளர்ச்சி அக்கிராமத்தில் வாழும் மக்களின் கையிலேயே தங்கியுள்ளது. அந்த வகையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வேலைத் திட்டங்களை முன்கொண்டுச் செல்வதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
வீதி நிர்மாணிப்பு, வடிகான் அமைத்தல், வாழ்வாதார உதவிகள், கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயம் போன்ற வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன' என குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கிராம சேவர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொது நிர்வனங்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
20 May 2025
20 May 2025