Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 மே 09 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
இந்த வருடத்துக்கான கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ், அட்டாளைச்சேனைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 32 கிராம அலுவலர் பிரிவுகளுக்கும் 32 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவற்றுக்கான வேலைத்திட்டங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்தார்.
மேற்படி பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், அப்பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.
மேலும் இந்தக் கூட்டத்தில், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அஸ்ரப் நகரிலுள்ள திண்மக்கழிவு சேகரிப்பு நிலையம் பராமரிக்கப்படாமையால் நோய்த் தொற்றும் சுகாதாரப் பாதிப்பும் ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எல்.அலாவுதீன் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், திண்மக்கழிவு சேகரிக்கப்படும் அஸ்ரப் நகரில் முறையான திட்டங்களை வகுத்து முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் காட்டு யானைகளின் தொல்லை காணப்படுவதுடன், இதனால் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டு;ம் உடைமைகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டும் உள்ளன. எனவே, இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும் எனவும் அவர் கூறினார்.
கோணாவத்தை ஆறு முதல் பெரிய களப்பு, சின்ன முகத்துவாரக் வடிச்சலில் நீர்த் தாவரங்கள் படர்ந்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் இதற்கு நீர்ப்பாசனத் திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கூறினார். இதனைத் தொடர்ந்து, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஊடாக நீர்த் தாவரங்களை துப்பரவு செய்வதற்கான நடவடிக்கையை முன்னெடுக்கப்பதற்கு இங்கு தீர்மானிக்கப்பட்டது.
அட்டாளைச்சேனை பிரதான வீதியிலுள்ள மீன் சந்தையை வேறிடத்துக்கு மாற்றுமாறு அட்டாளைச்சேனை பெரியபள்ளிவாசல்; நிர்வாகி ஒருவர் தெரிவித்ததைத் தொடர்ந்து, சந்தையை பொருத்தமான இடத்துக்கு மாற்றத் தீர்மானிக்கப்பட்டது.
ஒலுவில் மாவட்ட வைத்தியசாலை, தீகவாபி பிரதேச வைத்தியசாலைகளிலுள்ள ஆளணி மற்றும் வளப் பற்றாக்குறைகள் தொடர்பாகவும் கூறப்பட்டன. அதற்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு ஊடாக நடவடிக்கை எடுப்பதாக மாகாண சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
12 minute ago
20 minute ago
30 minute ago