2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கௌரவிப்பு நிகழ்வு

Princiya Dixci   / 2016 மே 06 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

2015ஆம் ஆண்டில் நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த அரச முகாமைத்துவ உதவியாளர்களாக பணியாற்றுபவர்களின் பிள்ளைகள், அனைத்து முகாமைத்துவ உதவியாளர்கள் தொழிற் சங்கத்தினால் பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளதாக சங்கத்தின் செயலாளர் நாயகம் என்.ரமணீஸ்வரன் தெரிவித்தார்.

இந்நிகழ்வு, அனைத்து முகாமைத்துவ உதவியாளர்கள் தொழிற் சங்கத்தின் தலைவர் ஏ.ஜீ.முபாறக் தலைமையில் மட்டக்களப்பு வின்சன்ற் மகளிர் கல்லூரியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (08) காலை 9.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் பிரதம அதிதியாகவும் கணக்காளரும் அம்பாரை மாவட்ட கணக்காளர் சேவை சங்க தலைவருமான எச்.எம்.எம்.றஷீட் கௌரவ அதிதியாகவும், ஆலையடிவேம்பு உதவி பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன், கிழக்கு மாகாண நிருவாகத்திற்கான பிரதிப் பிரதம செயலாளர் அலுவலக உதவிச் செயலாளர் எஸ்.பிரகாஷ் ஆகியோர்கள் விசேட அதிதிகளாகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது 2015ஆம் ஆண்டில் நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் அரச முகாமைத்துவ உதவியாளர்களாக கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் 26 மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளதாகவும் அனைத்து முகாமைத்துவ உதவியாளர்கள் தொழிற் சங்கத்தின் செயலாளர் நாயகம் என்.ரமணீஸ்வரன் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X