Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 30 , மு.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'சாதித்த மாணவர்களும் சரித்திர ஆசிரியர்களும்' எனும் தொனிப்பொருளில் மாபெரும் கௌரவிப்பு விழா வியாழக்கிழமை (03) பாடசாலை வளாகத்தில் நடைபெறவுள்ளதாக அபிவிருத்திக் குழுவின் செயலாளர் சலீம் றமீஸ் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.
பாடசாலை அதிபர் எம்.ஏ அன்சார் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.மொஹமட் நஸீர் பிரதம அதிதியாகவும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ் உதுமாலெவ்வை,வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம் காசீம் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் அட்டாளைச்சேனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ கஸ்ஸாலி சிறப்பு அதிதியாகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதன்போது, பாடசாலைக்கு பெருமை சேர்த்துக்கொடுத்த மாணவர்களும் அவர்களுக்கு கற்பித்து கொடுத்த ஆசிரியர்களும் பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
15 minute ago