2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கால்நடைகளைத் திருடிய எண்மர் கைது

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 05 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை, அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் கடந்த 3 மாதங்களாக கால்நடைகளை திருடிவந்த குற்றச்சாட்டின் பேரில் சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவர் உட்பட 8 பேரை நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.  

மேற்படி பிரதேசத்தில் கடந்த ஜுன் மாதம் தொடக்கம் இதுவரையில் 9 கால்நடைகள் திருட்டுப்போயுள்ளதாக  அவற்றின் உரிமையாளர்கள், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த  சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் உட்பட இறக்காமம், வாங்காமம். ஒலுவில் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த  8 பேரை கைதுசெய்துள்ளனர்

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் 18 வயது முதல் 35 வயதுவரை உள்ளவர்கள. இவர்கள் கால்நடைகளை திருடி கைதுசெய்யப்பட்ட ஊர்காவற்படை வீரர்  மூலமாக இறைச்சிக்கடை உரிமையாளர்களுக்கு விற்பனை செய்து, அவற்றை உடனடியாக வெட்ட அன்றையதினமே இறைச்சிக் கடைகளுக்கு கொண்டுவந்து விற்பனை செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.  இத்திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் தலைமறைவாகியுள்ளனர்.

இச்சம்பவத்தில் கைதுசெய்யப்பட் 7 பேரை நேற்று ஞாயிற்றுக்கிழமை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.எல்.ஏ.ரசீத் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது இவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார். அதேவேளை சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரை இன்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்; நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X