2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கொள்ளை போன ஆடைகள்

Princiya Dixci   / 2016 மார்ச் 10 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை நகரப்பகுதி, கண்டி வீதியிலுள்ள ஆடைகள் விற்பனை நிலையமொன்றின் கதவுகளை, நேற்று புதன்கிழமை (09) நள்ளிரவு உடைத்து அங்கிருந்து 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஆடைகளைக் கொள்ளையர்கள் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக  அம்பாறைப் பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த கடை உரிமையாளர், வழமைபோல கடையை சம்பவதினம் இரவு பூட்டிவிட்டுச் சென்ற நிலையில், இன்று வியாழக்கிழமை (10) காலை கடைக்கு வந்தபோது கடையின் பின்பகுதிக் கதவை உடைத்து அங்கிருந்த 1 இலச்சம் ரூபாய் பெறுமதியான ஆடைகள் கொள்ளையிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. 

இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, அம்பாறைப் பொலிஸார் மேலதிக விசாரணகளை மேற்கொண்டுவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X