2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கொள்ளையிடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

திருக்கோவில் தபாற்கந்தோருக்கு அருகாமையிலுள்ள மாடி வீடு ஒன்றினை உடைத்து கொள்ளையிடப்பட்ட மோட்டார் சைக்கிள், மட்டக்களப்பு ஆரையம்பகுதிப் பிரதேசத்தில் அநாதரவான நிலையில் நேற்று வியாழக்கிழமை (28) மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த வீட்டை, கடந்த செவ்வாய்க்கிழமை (26) இரவு உடைத்து அங்கிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் 24 இலச்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொள்ளையிடப்பட்ட மோட்டார் சைக்கிள் நேற்று (28) இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

இவ் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக விசரணைகள் இடம்பெற்றுவருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X