2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

குழாய்க்கிணற்றிலிருந்து நீல நிற நீர்

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்

அம்பாறை, கல்முனைப் பிரதேசத்தில் மதரசா வீதியிலுள்ள வீட்டு வளவொன்றில் அமைந்துள்ள  குழாய்க்கிணற்றிலிருந்து கடந்த இரண்டு மாதங்களாகவிருந்து இளம் நீல நிறத்தில் நீர் வெளிவருகின்றது.

இது தொடர்பில் கல்முனை தெற்கு சுகாதாரப் பணிமனையில் நீரின் மாதிரியை  ஒப்படைத்து தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீரின் மாதிரி பரிசோதனைக்காக கொழும்பிலுள்ள பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்போதைக்கு அக்குழாய்க்கிணற்று நீரை அருந்த வேண்டாமெனவும் அவ்வீட்டு உரிமையாளருக்கு அறிவுறுத்தியுள்ளதாக மேற்படி பணிமனையின் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.றைஸ் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X