2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கிழக்கு மாகாண சபை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்

Niroshini   / 2016 பெப்ரவரி 24 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா,பைஷல் இஸ்மாயில்  

வட மாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை விரைவில் நிறைவு செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண சபை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர்; எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற கிழக்கு மாகாண சபை அமர்விலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

வட மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுகின்ற போதும், இனவாத நோக்குடன் செயற்படும் சில அமைப்புக்கள் இம்மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை தாமதப்படுத்துவதுடன், முஸ்லிம் மக்கள் தொடர்பாக பொய்யான விபரங்களை மக்கள் மத்தியில் பரப்பியும் வருகின்றனர்.

எனவே, வட மாகாண முஸ்லிம்  மக்களின் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் நிறைவு பெறுவதற்கு கிழக்கு மாகாண சபை ஏகமனதாக தீர்மானம் எடுத்து அரசாங்கத்துக்கு கோரிக்கை முன்வைக்க வேண்டும்.

மேலும், இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வட மாகாண சபையும் வட மாகாண தமிழ் மக்களும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X