2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கிழக்கு மாகாண சபையின் பிரதம கணக்காய்வாளர் நியமனம்

Suganthini Ratnam   / 2016 ஜூன் 02 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனை மாநகர சபையின் கணக்காளர் எச்.எம்.எம்.றஷீட், கிழக்கு மாகாண சபையின் பிரதம கணக்காய்வாளராக மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோவினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதம் நேற்று புதன்கிழமை (01) திருகோணமலையில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் வைத்து ஆளுநரினால் கையளிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 03ஆம் திகதியில் இருந்து அமுலாகும் வண்ணம் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 28ஆம் திகதி கிழக்கு மாகாண சபையினால் நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையின் மூலம் இவர் இப்பதவிக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இலங்கை கணக்காளர் சேவையின் முதலாம் வகுப்பைச் சேர்ந்த இவர் கல்முனை வலயக் கல்வி அலுவலகம், பொலிஸ் திணைக்களத்தின் அம்பாறை- மட்டக்களப்பு பிராந்தியக் காரியாலயம் என்பவற்றில் கணக்காளராகவும் கிழக்கு மாகாண சபையின் கல்முனைப் பிராந்திய பிரதி கணக்காய்வாளராகவும் கடமையாற்றியுள்ளார். இவர் 2014ஆம் ஆண்டு மே மாதம் தொடக்கம் கல்முனை மாநகர சபையில் கணக்காளராக கடமையாற்றி வருகின்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X