Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 மே 29 , மு.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா
கிழக்கு மாகாண வைத்தியசாலைகளின் அபிவிருத்திப் பணிகளுக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் அலுவலகம் தடையாக இருந்து வருவதாக சுகாதாரப் பிரதியமைச்சர் பைஷால் காசீம் தெரிவித்தார்.
சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலைக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர், அங்கு நடைபெற்ற கலந்துரையாடலின்போதே, மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'கிழக்கு மாகாண வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலுள்ள பெரும்பாலான வைத்தியசாலைகளுக்கு விஜயம் செய்து அங்குள்ள குறைநிறைகளை கண்டறிந்தோம். இதன் பிரகாரம் சம்பந்தப்பட்ட வைத்தியசாலைகளின் அபிவிருத்திக்கான மதிப்பீட்டு அறிக்கைகளை கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அலுவலகத்திடம் கோரியிருந்தோம். ஆனால், மதிப்பீட்டு அறிக்கைகள் இன்றுவரை கிடைக்கவில்லை. அவைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளனவா என்று சந்தேகிக்கின்றோம். இதனால், இவ்வைத்தியசாலைகளுக்கு மத்திய சுகாதார அமைச்சினால் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதில் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றோம்.
எமது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட வைத்தியசாலைகளில் நிறையக் குறைகள் காணப்படுகின்றன. அவைகளை நிவர்த்தி செய்வதற்கு நாம் தயாராகின்றபோது இவ்வாறான சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இவ்வாறான பிரச்சினைகளுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்பது குறித்து நான் சுகாதார அமைச்சருடன் கலந்தாலோசித்து வருகின்றேன். நானும் அவரும் இன, மத, பிரதேசவாதங்களுக்கு அப்பால் நின்று சேவையாற்றுகின்றோம். கிழக்கு மாகாணத்தைப் பொருத்தவரை இப்பணிகளுக்கு மாகாண சுகாதார திணைக்கள அதிகாரிகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
2 hours ago